Saturday, June 14, 2008

இருளில் ஒரு கனவு



காரிருட்டில் ஒளிக்கும்
நிலவு வேண்டும்

அதன் கீழே தனியாய்
நானிருக்க வேண்டும்

அங்கே மனதை வருடும்
நிசப்தம் வேண்டும்

என்னுள் எதையும் சிந்திக்காத
சிந்தை வேண்டும்

மணல்தரியில் படுத்து
உறங்கிட வேண்டும்

பிடித்தவை எல்லாம்
கனவாக வேண்டும்

அக்கனவில் ஒரு வாழ்க்கை
நடத்திட வேண்டும்

நல்லவை எல்லாம்
நடந்திட வேண்டும்

அங்கு எப்பொழுதும் பாடும்
மனிதன் வேண்டும்

தீவையை எண்ணாத
மனங்கள் வேண்டும்

மதங்கள் இல்லாத
மக்கள் வேண்டும்

துன்பத்திலும் மனிதன்
சிரித்திட வேண்டும்

சிரிப்பே தேசிய கீதம்
ஆகிட வேண்டும்

சிறு குழியிலும் தண்ணீர்
தோன்றிட வேண்டும்

பின்னர் என் கனவுகள் கலையாமல்
நிரந்திரம் ஆகிட வேண்டும்.

உன் கனா காணும் கண்களால்
நான் வினா தாள் கண்ட
மாணவன் போலானேன்..
உன் பார்வை வினாவில்
தொலைந்து விடை தேடினேன்...