Wednesday, May 6, 2009

சற்று சிந்தித்து பார் - தீவிரவாதிக்கு சமர்ப்பணம்

பொய் வாக்கு உறிதிகளும்
வஞ்சனை வாக்கியங்களும்
வெற்று போராட்டங்களும்
திடீர் உண்ணாவிரதங்களும்
கண் துடைப்பு விலை குறைப்புகளும்
இலவச வேட்டிசட்டைகளும்
வோட்டுக்கு இரு நூறு ரூபாயும்
போட்டிக்கு மத கலவரத்தையும்
தான் பாட்டுக்கு இன கலவரத்தையும்
தூண்டி விடுவது சராசரி மனிதனா?

தீவிரவாதத்தால் பகை போக்கி
மறைந்தவர்களுக்கு பகரம் கோரி
ஓர் இஸ்லாமியனுக்கு
மற்றொரு இந்து
ஓர் உயிருக்கு
மற்றொரு உயிர் என்று
போர் குரல் எழுப்பி செல்லும்
கோழை தீவிரவதியே!

உனது கோழைத்தனமான வீரம்
சோற்றிற்கு மண்டியடிக்கும்
நடுத்தர வர்கத்திடம் தான் செல்லும்.

சமுதாயத்தை திருத்திவது தான்
உன் நோக்கமென்றால்-உனக்கென்று
ஓர் கொள்கை இருந்தால் - தவறு
செய்பவரை தட்டிக்கேள் - அல்லாது
என் போன்ற நடுத்தர வர்கத்திடம்
காட்டாதே உனது கோழை வீரத்தை.

நீ செய்யும் தவறினால்
மற்றுமொரு அமைப்பு உருவாகும்,
அவர்கள் உன்னை சார்ந்தவரை
களை எடுக்க- நீ அவர்களை களை எடுக்க
இறுதியில் அரசியல் சதுரங்கத்தில்
வெறும் காய்களாக போவாய்.
சற்று சிந்தித்து பார்.